Virtual box (விர்ச்சுவல் பாக்ஸ்)

Oracle Virtual Box 

                        விர்ச்சுவல் பாக்ஸ் என்பது ஆரக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஓபன் சோர்ஸ் (Open source) சாப்ட்வேர் ஆகும்.

 இந்த சாப்ட்வேர் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டம்-ஐ (Opersting System)  இயக்க முடியும்.


எடுத்துக்காட்டாக விண்டோஸ் எக்ஸ்பீ (XP), விண்டோஸ் 7, விண்டோஸ் 8, விண்டோஸ் 10, லினெக்ஸ் (Linux), உபுண்டு (Ubuntu), பெடோரா (Fedora), டெபியன் (Debian), சோலாரிசு (Solaris) போன்ற பல்வேறு இயங்குதளங்களை மெய்நிகராக (Virtual) நிறுவிக் கொள்ளலாம்.

 வெவ்வேறு தேவைகளுக்கு வெவ்வேறு இயங்கு தளங்கள் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த மென்பொருள் பெரிதும் பயன்படுகிறது.

இந்த லிங்க் மூலம் விரச்சுவல் பாக்ஸ்-ஐ டவுன்லோட் செய்துகொள்ளலாம் .

https://www.virtualbox.org/


விர்ச்சுவல் பாக்ஸ் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்.
  1. ஹார்ட்வேர் Hardware செலவு குறைகிறது.
  2. ஒரே கம்ப்யூட்டரில் பல ஆப்பரேட்டிங் சிஸ்டம்-ஐ பயன்படுத்த முடியும்.
  3. ஹார்ட்வர் பிரச்சனை இதில் ஏற்படாது.
  4. சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டம்-ஐ விர்ச்சுவல் ஆக ரன் செய்ய முடியும். இதனால் ஹார்ட்வர் செலவு பெருமளவு குறைகிறது.
  5. நினைவகத்தில் (ram) ஒரு பகுதியை செயற்கை நினைவகமாக மாற்றி பயன்படுத்தலாம்.

File Format
  1.  VDI  - என்பது விர்ச்சுவல் டிஸ்க் இமேஜ் (Virtual Disk Image). இது ".vdi" என்ற Extension-இல் சேவ் ஆகும்.
  2. VHD - என்பது விர்ச்சுவல் ஹார்ட் டிரைவ் (Virtual Hard Drive). இது ".vhd" என்ற Extension-இல் சேவ் ஆகும்.



மேற்கண்ட படத்தில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் configure செய்யப்பட்டுள்ளது.
  1. முதலில் விர்ச்சுவல் பாக்ஸ் சாப்ட்வேர்-ஐ https://www.virtualbox.org/ வெப்சைட்டிலிருந்து டவுன்லோட் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும்.
  2. டவுன்லோட் செய்யும் முன் உங்கள் கம்ப்யூட்டரில் என்ன ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறீர்கள் என்று பார்த்து அதற்கேற்ப டவுன்லோட் செய்ய வேண்டும்.
  3. உதாரணமாக உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் xp ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தினால் விர்ச்சுவல் பாக்ஸ் விண்டோஸ் சாப்ட்வேர்-ஐ டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும். நீங்கள் உபுண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தினால் விர்ச்சுவல் பாக்ஸ் உபுண்டு சாப்ட்வேர்-ஐ டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும்.
  4. இன்ஸ்டால் செய்தபிறகு ஓப்பன் செய்து New என்ற option-ஐ ஓப்பன் செய்ய வேண்டும்.
 SCREEN SHOTS:




























Comments

Popular Posts

Microsoft Outlook Configuration || மைக்ரோசாப்ட் அவுட்லுக்

Use whatsapp on your pc or laptop...

GTA Vice City Cheats

GTA San Andreas Cheats

compare windows 10 vs windows 7

Apple vs Dell laptop

Remove I LOVE YOU virus?

GOOGLE INTRODUCES ADVANCED NAVIGATION SYSTEM FOR PAKISTAN